அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு மே மாதம் தலா 15 நாட்கள் அமைப்பாளருக்கும், உதவியாளருக்கும் கோடை விடுமுறை விட அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்களில் 25 லட்சம் குழந்தைகள் பயில்கின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தில் இணை உணவும், மாநில அரசு திட்டத்தில் மதிய உணவும் வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகின்றன. ஆனால் அங்கன்வாடி மையங்களுக்கு இல்லை.பெரும்பாலான மையங்களில் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையே உள்ளன. இதனால் குழந்தைகளுக்கு அம்மை, கொப்புளங்கள் போன்ற வெப்ப நோய் தாக்குகின்றன. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருகின்றனர். ஊழியர்கள் மட்டும் பணிக்கு செல்லும் நிலை உள்ளது. இதையடுத்து கோடை விடுமுறை கேட்டு அங்கன்வாடி மைய ஊழியர்கள் போராடி வருகின்றனர். ஆண்டில் 300 நாட்களும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இணை உணவு கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் விடுமுறை விட அரசு தயக்கம் காட்டியது. கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு பிப்., 6 முதல் பிப்., 8 வரை தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.பிப்., 1 சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஊதிய முரண்பாடுகளை களைவதாகவும், மையங்கள் மூடாதபடி மே மாதம் தலா 15 நாட்கள் அமைப்பாளர்களுக்கும், உதவியாளர்களுக்கும் விடுமுறை விடப்படும் என, தெரிவித்தனர். விரைவில் விடுமுறைக்கான அரசாணை வெளியாக உள்ளது.
Search This Blog
Monday, February 05, 2018
Comments:0
அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை : விரைவில் அரசாணை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.