தொடக்கக் கல்வி மாதிரி கால அட்டவணையில் விளையாட்டுப் பாடவேளையை 4-வது பாடவேளையாக மாற்ற கோரிக்கை - தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு 02-11-2026
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி மாணவர்கள் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் - மதிய உணவுக்கு பின் வெயில் நேரத்தில் விளையாட்டு ஆபத்து - தொடக்கக் கல்வி இயக்குநருக்கு மனு
தொடக்கப் பள்ளிகளில் 2 மணி முதல் 3 மணி வெயிலில் விளையாட்டுப் பாடவேளை வேண்டாம் - கடைசி பாடவேளையாக மாற்றக் கோரிக்கை!
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் இரா.தாஸ் 02-11-2026 அன்று தொடக்கக் கல்வி இயக்குநருக்கு மனு - புதிய மாதிரி கால அட்டவணையில் விளையாட்டுப் பாடவேளையை மூன்றாவது பாடவேளையாக (2-3 மணி) வைத்தது வரவேற்கத்தக்கது என்றாலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கடுமையான வெயிலில் விளையாடுவது உடல்நலத்திற்கு உகந்ததல்ல - கடைசி பாடவேளையாக மாற்ற கோரிக்கை.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
Thamizhaga Arampapalli Asiriyar Kootani
பதிவு எண்: 147/99
நாள்-02-11-2026
பெறுநர்
மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள்,
தொடக்கக் கல்வி இயக்ககம்,
சென்னை.
மதிப்புமிகு அய்யா, வணக்கம்.
பொருள்: தொடக்கக் கல்வி மாதிரி கால அட்டவணையில் விளையாட்டுப் பாடவேளையை மாற்றியமைக்கக் கோருதல் - சார்பு.
🙏 புதிய அட்டவணைக்கு நன்றி - ஆனால் ஒரு சிக்கல்
தொடக்கக் கல்வித் துறையில் புதிய மாதிரி கால அட்டவணை மற்றும் சுற்றறிக்கை வெளியிட்டமைக்கு நன்றி. மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் விளையாட்டுப் பாடவேளை அவசியம் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தியதற்கு ஏற்ப, தற்போதைய சுற்றறிக்கையில் விளையாட்டுப் பாடவேளையை சேர்த்திருப்பது வரவேற்கத்தக்கது.
🔥 பிற்பகல் 2 மணி முதல் 3 மணி - கடுமையான வெயில் நேரம் - 10 வயது குழந்தைகள் பாதிப்பு
அதே வேளையில், தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள். தற்போதைய அட்டவணையின்படி மதிய உணவுக்குப் பிறகு, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை மூன்றாவது பாடவேளையாக, வாரத்திற்கு மூன்று நாட்கள் விளையாட்டுப் பாடவேளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரம் கடுமையான வெயில் நேரமாகும். இந்த வெயிலில் சிறு குழந்தைகள் விளையாடுவது அவர்களின் உடல் நலத்திற்கு உகந்ததாக அமையாது. உடல் சோர்வு, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
✅ கோரிக்கை - கடைசி பாடவேளையாக மாற்ற வேண்டும்
எனவே, விளையாட்டுப் பாடவேளையை மூன்றாவது பாடவேளைக்குப் பதிலாக, கடைசிப் பாடவேளையான நான்காவது பாடவேளையாக மாற்றி அமைத்தால், வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். மாணவர்கள் உற்சாகமாக விளையாட்டில் பங்கேற்று தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக அமையும்.
ஆகவே, 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, விளையாட்டுப் பாடவேளையை கடைசி பாடவேளையாக மாற்றி திருத்திய அறிவிப்பினை வெளியிடுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு
இரா.தாஸ்
பொதுச் செயலாளர்
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்
டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்.
🙏 அண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களது வலைதளப் பக்கத்தை எப்போதும் பின்தொடருங்கள்!
🔔 தொடக்கக் கல்வி | பள்ளிக்கல்வி | ஆசிரியர் செய்திகள் - Follow செய்யுங்கள்


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.