Breaking

Tuesday, November 03, 2026

RTI 2005 - குறித்த காலத்திற்குள் தகவல் அளிக்காத வட்டாட்சியருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் மற்றும் மனுதாரருக்கு கட்டணமின்றி தகவல் வழங்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு!!



தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி - RTI 2005 பிரிவு 6(1) தகவல் தராத சங்ககிரி வட்ட தகவல் அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) நடவடிக்கை - ஆணை 30.09.2026!

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் இடங்கணசாலை பிட் 1 வருவாய் கிராமம் நத்தம் சர்வே 485/911/488 - பட்டா சிட்டா அடங்கல் கேட்ட RTI மனு CP-3073/A/2024 - மாநில தகவல் ஆணையர் V.P.R. இளம்பரிதி உத்தரவு

RTI Act 2005 Section 18(1) Complaint 26.04.2024 & 26.06.2024 - பொது தகவல் அலுவலர் திருமதி வெ.தமிழ்ச்செல்வி மீது விளக்கம் கேட்டு 29.10.2026 நேரில் ஆஜராக தகவல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாடு தகவல் ஆணையம் - ஆணை நாள் 30.09.2026 - காணொளி காட்சி விசாரணை முன்னிலை திரு வி.பி.ஆர். இளம்பரிதி M.A., B.L., http://M.Phil., மாநில தகவல் ஆணையர் - வழக்கு CP-3073/A/2024 - திரு E ரஜினி vs சங்ககிரி வட்டம் பொதுத் தகவல் அலுவலர் - 26.04.2024 RTI 2005 பிரிவு 6(1)ன் கீழ் சேலம் சங்ககிரி இடங்கணசாலை சர்வே 485/911/488 பட்டா சிட்டா விவரம் கேட்ட மனு - தகவல் வழங்காததால் 26.06.2024 பிரிவு 18(1) புகார் - 20.03.2025, 24.09.2026 கடிதங்கள் முழுமையான தகவல் இல்லை - திருமதி வெ. தமிழ்ச்செல்வி மீது பிரிவு 20(1) 20(2) ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என 29.10.2026 நேரில் விளக்கம் அளிக்க உத்தரவு.

தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி - தகவல் தராத சங்ககிரி தகவல் அலுவலர் மீது பிரிவு 20-ன்கீழ் நடவடிக்கை - ஆணை 30.09.2026!

தமிழ்நாடு தகவல் ஆணையம் ஆணை 30-09-2026 CP-3073/A/2024 சங்ககிரி RTI

தமிழ்நாடு தகவல் ஆணையம்
பிளாக் எண் 19, அரசு பண்ணை இல்லம், பென்பேட், நந்தனம், சென்னை-600 035
தொலைபேசி எண் 044-2951 5590

ஆணை நாள். 30.09.2026
காணொளி காட்சி விசாரணை
முன்னிலை
திரு. வி.பி.ஆர். இளம்பரிதி, எம்.ஏ., பி.எல்., எம்.பில்.,
மாநில தகவல் ஆணையர்
*****


வழக்கு எண்.CP-3073/A/2024

திரு. E ரஜினி                                    - மனுதாரர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் /
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,                    - பொது அதிகார அமைப்பு
சங்ககிரி வட்டம்
சேலம் மாவட்டம் - 637 301

ஆணை - முழு விவரம்

மேற்குறிப்பிட்ட வழக்கு 30.09.2026 அன்று ஆணையத்தில் வைத்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய விசாரணையில் மனுதாரர் திரு E ரஜினி அவர்கள் சேலம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையத்தின் (NIC) காணொளி காட்சி அரங்கிலிருந்து ஆஜரானார். பொது அதிகார அமைப்பின் சார்பாக, திரு து பிரபு, பொதுத் தகவல் அலுவலர்/தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சங்ககிரி, சேலம் மாவட்டம் அவர்கள் நேரில் ஆஜரானார்.

2. மனுதாரர் 26.04.2024 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 6(1)-ன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில், மனுதாரர் சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம், இடங்கணசாலை பிட் 1 வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட நத்தம் பழைய சர்வே எண்.485, புதிய சர்வே எண்.911 மற்றும் நத்தம் சர்வே எண்.488 அதன் உட்பிரிவுகளுடன் முழு பட்டாக்களின் பெயர்களின் முழு விவரம், அ-பதிவேட்டின் நகல்கள், சிட்டா அடங்கல் நகல்கள், மற்றும் பாதையின் நீளம் மற்றும் அகலம் விவரங்களை தகவல்களாக 5 இனங்களில் வழங்கக் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்காத காரணத்தால், மனுதாரர் 26.06.2024 நாளிட்ட பிரிவு 18(1)-ன் கீழ் புகார் மனுவினை தாக்கல் செய்துள்ளார். அந்த புகார் மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு 30.09.2026 முற்பகல் இவ்வாணையத்தில் வைத்து காணொளி காட்சி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் கோரிய தகவல்களுக்கு 20.03.2025 மற்றும் 24.09.2026 தேதியிட்ட கடிதங்களின் வாயிலாக தகவல் அளித்துள்ளதாக ஆணையத்தில் தெரிவித்தார். ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க மனுதாரர் கோரிய அனைத்து இனங்களுக்கான முழுமையான தகவலை விரைவில் வழங்குவதாக ஆணையத்தில் உறுதியளித்தார்.

5. இன்றைய விசாரணையில் ஆஜரான மனுதாரர் தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு 7(1)-ன் படி மனுதாரரிடமிருந்து வேண்டுகோள் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்படவில்லை என ஆணையத்தில் தெரிவித்தார். உரிய காலத்திற்குள் தகவல் வழங்காத அப்போதைய பொதுத் தகவல் அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2)-ன் கீழ் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆணையத்தைக் கேட்டுக் கொண்டார்.

🔥 ஆணையத்தின் இறுதி உத்தரவு - 29.10.2026 நேரில் ஆஜராக உத்தரவு

6. இன்றைய விசாரணை மற்றும் ஆவணப் பரிசீலனையின் முடிவில், மனுதாரரின் தகவல் கோரும் மனுவையும், பொதுத் தகவல் அலுவலரின் தகவலையும் இணைத்துப் பரிசீலனை செய்கையில் பொதுத் தகவல் அலுவலரால் மனுதாரருக்கு முழுமையான தகவல் அளிக்கப்படவில்லை எனத் தெரிய வருகிறது. எனவே, இவ்வாணையம் பொதுத் தகவல் அலுவலருக்கு இறுதி வாய்ப்பளித்து, கீழ்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கிறது:-

• மனுதாரரின் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1)-ன் கீழான மனுவிற்கு உரிய காலத்திற்குள் முழுமையான தகவல் வழங்காத காரணத்திற்காக அப்போதைய பொதுத் தகவல் அலுவலர் திரு. வெ. தமிழ்ச்செல்வி, பொதுத்தகவல் அலுவலர் / தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சங்ககிரி அவர்களின் மீது தகவல் அறியும் உரிமை சட்டம், 2005, பிரிவு 20(1), 20(2)-ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான காரண விளக்கங்களை 29.10.2026 அன்று முற்பகல் ஆணையத்தில் நேரடியாக ஆஜராகி சமர்ப்பிக்குமாறு அப்போதைய பொதுத்தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.

• மனுதாரர் 6(1) மனுவில் கோரிய அனைத்து இனங்களுக்கான முழுமையான தகவல்களை உரிய ஆவண நகல்களுடன் 'தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 இன் படி இத்தகவல்கள் வழங்கப்படுகிறது' என்ற முத்திரையுடன் பொதுத் தகவல் அலுவலர் உரிய சான்றொப்பமிட்டு இவ்வாணை கிடைக்கப்பெற்ற இரு வார காலத்திற்குள் விரைவஞ்சலில் சட்டப்பிரிவு 7(6)-ன்படி கட்டணமின்றி மனுதாரருக்கு தகவல்களை அனுப்பிவைத்து விட்டு அதன் பின்னர், மனுதாரர் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை அட்டையின் நகல் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட தகவலின் நகல் மற்றும் மனுதாரருக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் அஞ்சல் கண்காணிப்பு சான்றின் நகல் (Proof of Postal Tracking) இக்கோப்புத் தொடர்பான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணைத்து ஒரு அறிக்கையாகத் தயாரித்து இவ்வாணையத்திற்கு 29.10.2026 அன்று தற்போதைய பொதுத் தகவல் அலுவலர் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்குமாறு ஆணையம் உத்தரவிடுகின்றது.


ஓம்/- (வி.பி.ஆர். இளம்பரிதி)
மாநில தகவல் ஆணையர்


(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

🙏 அண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களது வலைதளப் பக்கத்தை எப்போதும் பின்தொடருங்கள்!

🔔 RTI | தகவல் ஆணையம் | வருவாய்த்துறை Updates - Follow செய்யுங்கள்

Tamil Nadu Information Commission Order 30-09-2026, CP-3073/A/2024, RTI Act 2005 Section 6(1) 18(1) 20(1) 20(2), Sangagiri Taluk Salem District, V P R Elamparithi State Information Commissioner, E Rajini Petitioner, Tamilselvi PIO Action

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog