நீட் தேர்வு முடிவு வெளியான பின் கால்நடை படிப்புக்கு கவுன்சலிங்: பல்கலை, துணைவேந்தர் தகவல் Counseling for veterinary courses to be held after NEET results are released: University and Vice-Chancellor announce.
நீட் தேர்வு முடிவு வெளியானதும் தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புக்கான கவுன்சலிங் தொடங்கும் என பல்கலைக்கழக துணை வேந்தர் (பொ) நரேந்திரபாபு தெரிவித்தார்.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும்ஆராய்ச்சி நிலையத்தில் அவர் மேலும் பேசியதாவது: கால்நடை மருத்துவ மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளில் அதிக ஈடுபாடு கொண்டு, கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்காக 16 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதற்கான நிதி உதவிகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பல்கலைகழகத்தின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் பிவிஎஸ்சி கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்காக 20 ஆயிரத்து 100 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு 660 கால்நடை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் மற்றும் 100 பி.டெக். இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கப்படும்.
வெட்னரி கவுன்சிலின் அனுமதி கிடைத்தால் கூடுதலாக 100 இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தனியார் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் தொடங்க இதுவரை யாரும் விண்ணப்பிக்கவில்லை. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தோல் தொழிற்சாலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு கூறினார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.