மூத்த குடிமக்கள் தபால் வாக்கு செலுத்த படிவம் 12-டி விநியோகிக்கும் பணி தொடக்கம்
மதுரை
மதுரையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவதற்கான படிவம் 12-டி விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்கும் முறை, கடந்த மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. இதில் மதுரை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 1,159 பேர், 40 சதவீதத்துக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் 891 பேர் என மொத்தம் 2,050 பேர் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்கு அளித்தனர்.
அதன்படி, இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தங்களது வீட்டிலிருந்தபடியே தபால் வாக்களிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளைச் சேர்ந்த மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று படிவம் 12-டி விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
இதுவரை தபால் வாக்கு செலுத்த விண்ணப்பிக்காத மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தங்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என, மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
This news article announces the start of distributing Form 12-D for postal voting to senior citizens and people with disabilities in Madurai.
The initiative allows voters over 85 and people with over 40% disability to vote from home.
The distribution of Form 12-D has begun across all 10 constituencies in the Madurai district.
Individuals who have not received the form can apply through their local polling station officer.
Sunday, March 22, 2026
மூத்த குடிமக்கள் தபால் வாக்கு செலுத்த படிவம் 12-டி விநியோகிக்கும் பணி தொடக்கம்
Voter Helpline App
Labels:
Assembly Election,
FORMS,
postal vote,
Tamil Nadu State Election Commission,
voter,
Voter Helpline App
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.