பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: ஸ்கிரைப் நியமனத்தில் மாற்றம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஸ்கிரைப் நியமன விதிமுறைகளில் தேர்வுத் துறை சில திருத்தங்களை செய்துள்ளது. சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை இந்த பணிக்கு நியமிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் க.சசிகலா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புக்கான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வர்களின் முகப்புத் தாள்கள் முதன்மை விடைத்தாள்களுடன் தைக்கப்பட்டுள்ளதை தேர்வுக்கு முன்னரே உறுதி செய்ய வேண்டும்.
இதுதவிர, சொல்வதை எழுதுபவர் (ஸ்கிரைப்) நியமனங்களில் தேர்வு நடைபெறும் பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது. அதேபோல, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் அறை கண்காணிப்பு பணியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு வழங்கப்படும் கோடிடப்படாத கூடுதல் விடைத்தாள்களை போதுமான அளவு பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: தேர்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்
This newspaper clipping contains important instructions from the Directorate of Government Examinations regarding the 10th class public examinations.
Teachers for classes 6 through 8 should be appointed as scribes for 10th-grade students. The appointed scribe should not be teaching the specific subject of the exam, but should be familiar with it.
The front pages of answer sheets for subjects like Mathematics, Science, and Social Science must be stitched before the exam begins.
The exams began on March 11 and are scheduled to conclude on April 6, with the Mathematics exam on March 25.
சென்னை, மார்ச் 20: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்களாக 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக் கும் ஆசிரியர்கள்தான் நியமிக் கப்பட வேண்டும் என தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அரசுத் தேர் வுகள் இயக்குநர் க.சசிகலா, அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள், தேர் வுத் துறை உதவி இயக்குநர்க ளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புக்கான கணிதம், அறிவியல், சமூக அறி வியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வர்களின் முகப்புத் தாள் கள் முதன்மை விடைத்தாள்க ளுடன் தைக்கப்பட்டுள்ளதைத் தேர்வுக்கு முன்னரே செய்ய வேண்டும். உறுதி சொல்வதை எழுதுபவர் நிய மனங்களில் தேர்வு நடைபெ றும் பாடத்தைப் பயிற்றுவிக் கும் ஆசிரியர்களை நியமிக் கக் கூடாது.
மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 6 முதல்8-ஆம் வகுப்பு வரை பயிற் றுவிக்கும் ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும். அவ் வாறு நியமிக்கப்படும் ஆசிரியர் கள் சம்பந்தப்பட்ட பாடத்தை போதிப்பவராக இல்லாமல் அப்பாடத்தைப் பற்றி அறிந்த வராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தேர்வருக்கு வழங்கப்ப டும் கோடிடப்படாத கூடுதல் விடைத்தாள்களை (அன் ரூல்டு) போதுமான அளவு பெற்று வைத்துக் கொள்ள அனைத்து முதன்மைக் கண்காணிப்பா ளர்களுக்கும் தெரிவிக்க உதவி இயக்குநர்கள் கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர் வெழுதும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங் களுக்கான தேர்வுகள் முடி வடைந்த நிலையில், கணிதப் பாடத்துக்கான தேர்வு மார்ச் 25-இல் நடைபெறவுள்ளது. இந்த வகுப்புக்கான பொதுத் தேர்வு ஏப். 6-ஆம் தேதி நிறைவடையவுள்ளது குறிப்பி டத்தக்கது.


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.