CUET நுழைவுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு Timetable for CUET entrance exam released
முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு மார்ச் 6 முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான தேர்வுக் கால அட்டவணையை என்டிஏ வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, வரும் (2026-27) கல்வி ஆண்டில் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு கணினி வழியில் மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளதாக என்டிஏ அறிவித்தது.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த டிச.14-ல் தொடங்கி ஜன.25-ம் தேதியுடன் முடிந்தது. 4.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தேர்வுக் கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, க்யூட் தேர்வு மார்ச் 6 முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கான விரிவான கால அட்டவணை https://exams.nta.ac.in/CUET-PG என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது 2026-ஆம் கல்வியாண்டிற்கான CUET (Common University Entrance Test) நுழைவுத் தேர்வு கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) படிப்புகளுக்கான முக்கிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
CUET PG 2026 (முதுகலை படிப்புகள்)
முதுகலை படிப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 6 முதல் மார்ச் 27, 2026 வரை நடைபெற உள்ளன.
தேர்வு தேதிகள்: மார்ச் 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 16, 17, 18, 19, 24, 25 மற்றும் 27.
தேர்வு நேரங்கள் (மூன்று ஷிப்டுகள்):
ஷிப்ட் 1: காலை 9:00 - 10:30.
ஷிப்ட் 2: மதியம் 12:30 - 2:00.
ஷிப்ட் 3: மாலை 4:00 - 5:30.
தேர்வு மையம் குறித்த தகவல் (City Slip): தேர்விற்கு 10 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும்.
CUET UG 2026 (இளங்கலை படிப்புகள்)
இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் தற்காலிகமாக மே 11 முதல் மே 31, 2026 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பத் திருத்தம் (Correction Window): பிப்ரவரி 9 முதல் 11, 2026 வரை நடைபெற்றது.
அட்மிட் கார்டு: மே மாத தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.