அரசுப் பள்ளியில் UKG மாணவர்களுக்கு பட்டமளிப்பு
பந்தலுார் அருகே, மராடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், யு.கே.ஜி., படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
ஆசிரியர் அப்சத் வரவேற்றார். தொடர்ந்து, தலைமை ஆசிரியர் அஷ்ரப் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
பட்டங்கள் பெற்ற மாணவர்களிடம், 'எதிர்காலத்தில் என்ன படிக்க போகிறீர்கள்' என, பெற்றோர் மத்தியில் ஆசிரியர்கள் கேட்டதில், 'டாக்டர், போலீஸ் ஆகிய பணிகளில் சேர ஆர்வம் உள்ளது,' என, குட்டீஸ்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.