"கல்வியே செல்வம்" - மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
தனது உதவியால் கல்லூரி மேல்படிப்பை முடித்த மாணவியை நேரில் அழைத்து வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின், பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஏழ்மையின் காரணமாக தனது கல்லூரி படிப்பிற்கு உதவிடுமாறு கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவி ஷோபனா கடிதம் எழுதியிருந்தார். அதனை ஏற்ற முதல்வர், மாணவியை நேரில் அழைத்து கல்லூரியில் சேர உதவியதுடன், அவரது மேல்படிப்புக்கும் உதவுவதாக உறுதியளித்தார். அதன்படி, மீனாட்சி அரசு கலை கல்லூரியில் பி.பி.ஏ., படிப்பை முடித்த மாணவி ஷோபனா, தனது குடும்பத்தோடு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் உதவியாளர் பணிக்கான ஆணையை கொடுத்து முதல்வர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'படிக்க உதவிட வேண்டும் என 2021-ஆம் ஆண்டு மாணவி ஷோபனா எனக்குக் கடிதம் எழுதினார். அவர் கல்லூரியில் சேரவும் படிக்கவும் உதவினேன். மூன்றாண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன். ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்பதையுணர்ந்து, பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்!,' என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.