மே 10-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 09, 2024

Comments:0

மே 10-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு

1228266
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு: மே 10-ல் முடிவு வெளியீடு

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வில் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தமிழ் உள்ளிட்ட மொழித்தாள், ஆங்கிலம், கணிதம், அறிவியல், விருப்ப பாடம் என ஒவ்வொரு பாடத்துக்கான தேர்வும் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளிவிட்டு நடந்து வந்தது. இந்நிலையில், கடைசி நாளான நேற்று சமூக அறிவியல் தேர்வு நடந்தது. அனைத்து தேர்வுகளும் நேற்றுடன் முடிவடைந்தன.

விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 88 மையங்களில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. 10-ம்வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84601018