தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை - 29.01.2024 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 29, 2024

Comments:0

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை - 29.01.2024

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை - 29.01.2024

இயக்க உறுப்பினர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

அன்புடையீர் வணக்கம்,

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ-ஜாக்) சார்பாக காணொலி மூலம் நடைபெற்ற மாநில உயர்மட்டக்குழு கூட்ட முடிவின் அடிப்படையில் 30.01.2024 செவ்வாய்கிழமை ஜாக்டோ-ஜியோ சார்பாக நடைபெறும் 243 அரசாணை ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு CPS ஒழிப்பு, சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்வது என ஒருமனதாக முடிவாற்றப்பட்டது. அதன் வழியில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக பெரும் திரளான எண்ணிக்கையில் கலந்து கொண்டு தன்னுடைய எழுச்சியையும், எதிர்பையும் வெளிப்படுத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.


*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செய்தி:*

*டிட்டோ ஜாக் கூட்டமைப்பில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து இணைந்து உள்ளது.*

*ஜாக்டோ-ஜியோ அமைப்பில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அங்கம் வகிக்க வில்லை.*

*எனவே , நாளை (30.01.2024) செவ்வாய்க்கிழமை காலை* *ஜாக்டோ-ஜியோ மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்கவில்லை.*

*நாளை (30.01.2024) மாலை 5:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் கொண்ட அமைப்பின் ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி பங்கேற்கும்.*

*இந்த ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுதும் நடைபெறும்.*

*அரசியல் சார்பு அற்ற 15 சங்கங்கள் இதில் பங்கேற்கின்றன.*

*அரசியல் தலைவர்களின் குறுக்கீடுகள் வழி காட்டுதல்கள் ஜாக்டோ-ஜியோவில் இருப்பதால் இந்த நிலைப்பாட்டினை எடுத்துள்ளார்கள்.*

இங்ஙனம்
*தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி,*
*மணப்பாறை வட்டாரக்கிளை.*
*திருச்சிராப்பள்ளி மாவட்டம்*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews