Breaking

Thursday, October 12, 2023

அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு



ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள் NEET, JEE ஆகிய போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள வழங்கப்பட்ட பயிற்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதில் ₹4.27 கோடி செலவினத்தைத் தவிர்த்திருக்கலாம் எனவும் 385 பயிற்சி மையங்களுக்கு தலா ₹55,000 செலவில் வாங்கப்பட்ட டிஷ் ஆண்டனாக்கள் 2018, 19 ஆகிய ஆண்டுகளில் 103 நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றச்சாட்டு.

₹3.18 கோடி மதிப்பில் மாணவர்களுக்கு வழங்கிய வழிகாட்டி புத்தகமும் பயன்படுத்தாததால், ₹2.15 கோடி செலவில் வழிகாட்டி புத்தகங்கள் மறுகொள்முதல் செய்யப்பட்டுள்ளது-அமைச்சர் அன்பில் மகேஸ்.

அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை"

ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் முரண்பாடுகள் உள்ளதால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை; ஆசிரியர்களுடன்

பேச்சுவார்த்தை நடத்த எனது இல்லக்கதவுகள் திறந்தே இருக்கும் 2018-19ம் ஆண்டுகளில் நீட் பயிற்சி வகுப்புகள் சரியாக நடத்தவில்லை; நீட் பயிற்சி சரியாக நடத்தாததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது; திட்டமிடல் இல்லாமல் 150 நாட்களுக்கு குறைவாகவே நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

ஆசிரியர் சங்கங்களை அன்பில் மகேஷ் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் சார்பில் நாளை போராட்டம் நடத்தப்பட உள்ளது . இதனையடுத்து.



அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் ஆசிரியர்கள் வரவில்லை. இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள அவர் , டிட்டோ ஜாக் அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார் .

CLICK HERE அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு VVIDEO

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog