Breaking

Tuesday, October 03, 2023

TET பணி வாய்ப்பு வழங்க வலியுறுத்தல்!!!

TET பணி வாய்ப்பு வழங்க வலியுறுத்தல்!!!

தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு விரைவில் வேலை வாய்ப்பு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என த.மா.கா., தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது:

மாநிலத்தில் 2013ல் டி.இ.டி., தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகளாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பின்றி காத்திருக்கின்றனர். பணிவாய்ப்பு வழங்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு மூலம் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும், டி.இ.டி., தேர்ச்சி பெற்றாலும் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசு உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது. இது அவர்களின் நியாயமான கோரிக்கை.அ.தி.மு.க., ஆட்சியில் டி.இ.டி., தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நடத்திய போராட்டத்தில் தி.மு.க., பங்கேற்று ஆதரவு தெரிவித்தது.

மேலும் பணிவாய்ப்பு வழங்கப்படும் என சட்டசபை தேர்தலில் வாக்குறுதியும் அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை.பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையிலும் டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள் எதற்காக 10 ஆண்டுகளாக காத்திருக்க வேண்டும். 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog