ரேஷன் ஊழியர் தேர்வு விபரம் வெளியிடப்படுமா?
கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள, 5,578 விற்பனையாளர், 925 எடையாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய, 2022 இறுதியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
விற்பனையாளர் பணிக்கு, 3.75 லட்சம் பேரும், எடையாளர் பணிக்கு, 41,000 பேரும் விண்ணப்பித்தனர். அவர்களிடம் நேர்காணல் நடத்தி, தகுதியானவர்கள் மார்ச் இறுதியில் தேர்வு செய்யப்பட்டனர்.
நீதிமன்ற வழக்கால் தேர்வு முடிவை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின், நாகை, கன்னியாகுமரி ஆகிய, இரு மாவட்டங்களில் வேலைக்கு தேர்வானவர்கள் பட்டியல் ஜூலையில் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, துாத்துக்குடி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேர்வானவர்கள் விபரம் சில தினங்களுக்கு முன் வெளியானது.
இதுகுறித்து, தேர்வர்கள் கூறுகையில், 'மாவட்டங்களில் வேலைக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடும் விபரம் தெரிவதில்லை.
'எனவே, இதுவரை எத்தனை மாவட்டங்களுக்கு தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது, மற்ற மாவட்டங்களில், எந்த தேதியில் வெளியிடப்படும் என்ற விபரத்தை, சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்' என்றனர்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.