சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أغسطس 16، 2023

Comments:0

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு:

சவுதி அரேபிய அமைச்சகம் பெண் செவிலியர்களுக்கான நேர்காணலை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி வருகிற 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான நேர்காணல் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான நேரம் மற்றும் இடம் தகவல் வந்தவுடன் தெரிவிக்கப்படும்.

சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்.சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (9566239685, 6379179200) (044-22505886/044-22502267).

இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.com என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வலைதளத்தில் தவறாமல் பதிவு செய்து பயனடையலாம்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்களோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة