அரசு பள்ளி மாணவர்கள் சிலம்பாட்டத்தில் அசத்தல்
கடம்பத்துார்:
சேலம் மாவட்டம் ஆத்துார் 'வசிஸ்ட சிலம்பம்' அகாடமி சார்பில் யோகா, சிலம்பம், நடனம், இசை, ஓவியம், கலை மற்றும் கைவினை ஆகிய கலைகளை ஒன்றிணைத்து, ஒரே நேரத்தில் மூன்று மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றியும், நடனம் ஆடியும், பறை இசைத்தும் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்ச்சி நடந்தது.
ஒரு மணி நேரத்தில் 100 யோகாசனம் என்ற முறையில் யோகாசனங்களை நிகழ்த்தியும், மாணவர்கள் மூன்று மணி நேரம் சாதனை புரிந்தனர். இந்த நிகழ்வில், யோகாவில் 200 மாணவர்கள், சிலம்பத்தில் 300 மாணவர்கள், நடனம் மற்றும் இசையில் 400 மாணவர்கள், ஓவியம், கலை மற்றும் கைவினை போன்ற கலைகளில் 70 மாணவர்கள், பெரியவர்கள் 30 பேர் என மொத்தம் 1,000 பேர் இந்த நிகழ்வை ஒரே நேரத்தில் நிகழ்த்தினர்.
ஆத்துாரில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி வளாகத்தில் உலக சாதனை போட்டி நடந்தது.
இதில், கடம்பத்துார், வெங்கத்துார் ஒன்றியம், பட்டரை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீசக்தி சிலம்பம் குழு பயிற்சியாளர் பழமுதிர் தலைமையில், மணவாள நகர் கே.ஈ.என்.சி.நடேசன் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், பிளஸ் 1 மாணவி ஆர்.மோனிஷா, கே.சுஜித்ரா மற்றும் மாணவர்கள் ஆர்.கார்த்திகேயன், ஆர்.பவித்ரன் மற்றும் பிளஸ் 2 மாணவி ஆர்.மனிஷா ஆகிய ஐந்து பேர் மூன்று மணி நேரம் தொடர்ச்சியாக இடைவிடாமல் சிலம்பம் ஆடி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
அதற்கான சான்றிதழ்களையும், கேடயத்தையும் ஆத்துார் வசிஸ்ட சிலம்பாட்ட அகாடமி நிறுவனர் அன்பரசு வழங்கினார்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.