மத்திய அரசு துறைகளில் நேரடி பணி வாய்ப்பு:
12ம் வகுப்பு தகுதி, 1000 காலியிடங்கள்!
மத்திய பணியாளர் தேர்வு வாரியம் மத்திய அமைச்சரவை மற்றும் மத்திய அரசின் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்வு மூலம் நேரடியாக ஆட்களைத் தேர்வு செய்கிறது.
அந்த வகையில் தற்போது ஸ்டெனோகிராபர் கிரேட் குரூப் சி மற்றும் டி-யில் 1200 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. அதற்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 2 முதல் துவங்கியது.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 23. அக்டோபரில் தேர்வு நடைபெறும்.
கிரேட் சி பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 30. கிரேட் டி-க்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.,யினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி.,க்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படுகின்றது.
ஸ்டெனோகிராபர் வேலைக்கான கல்வித் தகுதி 12ம் வகுப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு ஆகியவை இருக்கும்.
திறனறி தேர்வில் டிக்டேட் செய்வதை கணினியில் ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் மணிக்கு 100 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும்.
இத்தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100.
எழுத்துத் தேர்வு 2 மணி நேரம் 3 பிரிவுகளில் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
நுண்ணறிவு மற்றும் ரீசனிங் பிரிவில் 50 கேள்விகள், பொது அறிவுப் பிரிவில் 50 கேள்விகள், ஆங்கிலத்தில் 100 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 1 மதிப்பெண்.
தவறான பதிலுக்கு 0.3 மதிப்பெண் கழிக்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த இணையதளத்திற்கு செல்லவும்.
https://doc.ssc.nic.in/

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.