வரதட்சணை வாங்கினால் மாணவரின் கல்லூரி சான்று ரத்து: தெலங்கானா அரசு
வரதட்சணை வாங்கினால் மாணவரின் கல்லூரி சான்று ரத்து செய்ய தெலங்கானா அரசு திட்டமிட்டு வருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் கொலை அல்லது தற்கொலை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் தெலங்கானாவில் வரதட்சணை பிரச்னையால் கடைசி நிமிடத்தில் திருமணம் ரத்தான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதனை தடுக்கும் விதமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், சட்ட வல்லுனர்களுடன் சில நாட்களாக ஆலோசனை நடத்தினார். இதன்தொடர்ச்சியாக வரதட்சணை கொடுமைகளை தடுக்கும் வகையில் கல்லூரி பருவத்திலேயே மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது பள்ளி பருவம் முடிந்து புதிதாக கல்லூரியில் முதலாமாண்டு சேரும் மாணவர்கள் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடவேண்டும்.
அதில், ‘எனது திருமணத்தின்போது வரதட்சணை வாங்க மாட்டேன், வரதட்சணை என்பது சட்டப்படி குற்றம். அவ்வாறு நான் வரதட்சணை பெற்றால் என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்’ இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும். அதை மீறி எதிர்காலத்தில் வரதட்சணை பெற்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது ெதரியவந்தால் சம்பந்தப்பட்ட மாணவரின் கல்லூரி சான்றிதழ் ரத்து செய்யப்படும் வகையில் தெலங்கானா அரசு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.