பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 26, 2023

1 Comments

பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு
IMG_20230526_221635
ராமேசுவரத்தில் அரசு அனுமதியின்றி தனியாா் பள்ளி செயல்படுவதாக தொடுக்கப்பட்ட வழக்கில் பள்ளி கல்வித் துறை செயலா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமேசுவரத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி தாக்கல் செய்த பொது நல மனு:

இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பள்ளி கல்வித் துறை அனுமதியின்றி தனியாா் பள்ளி எப்படி செயல்பட முடியும். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தரப்பில் எவ்வித ஆய்வும் நடத்தப்படவில்லையா. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா்.

1 comment:

  1. blogger_logo_round_35

    தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் 😄😄

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84656567