4% அகவிலைப்படி உயர்வை ஜனவரி 1ம் தேதியிலிருந்து வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: 2023 ஜனவரி 1ம் தேதி முதல் ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்தது.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை ஜனவரி 1ம் தேதி முதல் வழங்க வேண்டும். ஆனால், இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ஏப்ரல் 1 முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு என்பது உரிமையே தவிர கருணை அல்ல. எனவே தற்போது அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை கடந்த ஜன.1ம் தேதி முதல் உடனடியாக வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு ஆணையில் ஒன்றிய அரசின் அகவிலைப்படி உயர்வு ஆணை மேற்கோள் காட்டப்பட வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.