ஆதிதிராவிடா் மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட ரூ.44 கோடி
ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட ரூ.44.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து தமிழக அரசின் உத்தரவு: ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் தங்களது பள்ளிக் கல்வியை இடைநிற்றல் இன்றி தொடரும் வகையில், மிகவும் பழுதடைந்துள்ள விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்று சட்டப் பேரவையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் அறிவித்திருந்தாா்.
இந்த நிலையில், சேத்தியாதோப்பு, குளித்தலை, மீன்சுருட்டி, திருவண்ணாமலை, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆகிய இடங்களில் இயங்கி வரும் 5 பள்ளி மாணவா் விடுதிகள், நிலக்கோட்டை, செய்யூா், வந்தவாசி, செஞ்சி, திருப்பனந்தாள் ஆகிய இடங்களில் இயங்கி வரும் 5 பள்ளி மாணவியா் விடுதிகள் என மொத்தம் 10 விடுதிகளுக்கு ரூ. 45. 45 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.
புதிய கட்டடங்களை கட்டுவதற்கு ரூ. 44.58 கோடிக்கு நிா்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.