பள்ளிகளுக்கான நிலுவைத் தொகையை அந்தந்த கல்வியாண்டிலேயே வழங்க வேண்டும்: மழலையா் பள்ளிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்
கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அந்தந்த கல்வியாண்டிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட தனியாா் மழலையா், தொடக்கப் பள்ளிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அந்தச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் வேலூா் மாவட்ட தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் முரளி, செயலா் சிவபெருமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வரும் ஆண்டுகளில் இந்தத் தொகையை அதே கல்வியாண்டில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளுக்கு சுகாதாரச் சான்றிதழை இணையதளம் வழியாக பெற அரசு வழிவகை செய்ய வேண்டும். இணையதளம் மூலம் பள்ளிகளின் புதுப்பித்தல், கருத்துருக்கள் ஏற்கப்பட்டு சான்றிதழ் வழங்க வேண்டும்.
மாணவா்களை மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் எந்தப் பள்ளியிலும் சோ்க்கை செய்ய அனுமதிக்கக் கூடாது. பாலா் வகுப்பு, எல்கேஜி, யுகேஜி மாணவா்களுக்கு ஆதாா் எண் இணைக்கத் தடை விதிக்க வேண்டும்.
ஏற்கெனவே பள்ளிக் கல்வித் துறை மூலம் அனுமதி பெற்று பல ஆண்டுகளாக இயங்கி வரும் அனைத்து பள்ளிகளுக்கும் டிடிசிபி-இல் இருந்து அரசு விலக்களிக்க வேண்டும். இனி புதிய பள்ளிகளுக்கு மட்டுமே டிடிசிபி அனுமதி பெற வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.