மரத்தடி வகுப்பு பள்ளிகள் எத்தனை?
பட்டியல் தயாரிக்க உத்தரவு
மரத்தடியில் வகுப்பு நடத்தும் பள்ளிகளின் பட்டியல் தயாரிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 2.50 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவற்றில், 47 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது.குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற திட்டத்தால், அரசு பள்ளிகளுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.
ஏராளமான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளுக்கு மாறி உள்ளனர்.ஆனால், மாணவர் சேர்க்கை அதிகரித்ததுபோல், ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. இதனால், பல பள்ளிகளில் கழிப்பறை மற்றும் வகுப்பறை கட்டடங்கள் இல்லாத நிலை உள்ளது.
பல அரசு தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் வகுப்பறை கட்டடம் இல்லாமல், மரத்தடி நிழலிலும், பள்ளிக்கு அருகில் உள்ள பொது இடங்களிலும் பாடம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், வெயில், மழை நேரத்தில் மாணவர்கள் ஒதுங்கக்கூட முடியாமல், பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு, 1,300 கோடி ரூபாய் செலவில் புதிய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் உள் கட்டமைப்புகளை ஏற்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதையொட்டி, மரத்தடி வகுப்பு நடக்கும் பள்ளிகளின் விபரங்களை, மாநிலம் முழுதும் சேகரித்து, பள்ளிக் கல்வித் துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.