பணி மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியருக்காக பாசப்போரட்டம் நடத்திய மாணவர்கள்.. மனம் மாறிய கல்வித்துறை அதிகாரிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 30, 2022

Comments:0

பணி மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியருக்காக பாசப்போரட்டம் நடத்திய மாணவர்கள்.. மனம் மாறிய கல்வித்துறை அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் பணியிட மாற்றம் செய்ய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (செய்தியாளர் - அ. சதிஷ்)

அடுத்த சொரகொளத்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பொற்குணம், மருத்துவாம்பாடி, கமலபுத்தூர், கருத்துவம்பாடி, கரிங்கல்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக திருவண்ணாமலையை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரை பள்ளிக்கல்வித்துறை வேறு பள்ளிக்கு நேற்று இரவு பணி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன் பேரில் மாற்றம் செய்யப்பட்ட பள்ளிக்கு ஆசிரியர் கணேஷ் பாபு சென்று விட்டார்.

இதையறியாமல் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த உடற்கல்வி ஆசிரியரை மாற்றியதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

உடற்கல்வி ஆசிரியரை பணி மாற்றம் செய்ததை கண்டித்து, மீண்டும் அதே பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியர் வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பாக தரையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடற்கல்வி ஆசிரியரை பணி மாற்றம் செய்ததை கண்டித்து, மீண்டும் அதே பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியர் வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பாக தரையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கணேஷ் பாபு, பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு சம்பந்தமான பயிற்சிகளை அன்பு கலந்த அக்கறையுடன் அளித்து, அவர்களை மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்து பரிசு பெற செய்தார் என்றும், சொரக்குளத்தூர் என்ற கிராமமே விளையாட்டால் மேம்பட்டது என்றும் கிராமவாசிகளும் பள்ளி மாணவ மாணவிகளும் தெரிவித்தனர். கணேஷ் பாபு, பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு சம்பந்தமான பயிற்சிகளை அன்பு கலந்த அக்கறையுடன் அளித்து, அவர்களை மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்து பரிசு பெற செய்தார் என்றும், சொரக்குளத்தூர் என்ற கிராமமே விளையாட்டால் மேம்பட்டது என்றும் கிராமவாசிகளும் பள்ளி மாணவ மாணவிகளும் தெரிவித்தனர்.

தொடர்ந்து இரண்டு மணி நேரமாக வகுப்புக்கு செல்லாமல் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அந்த போராட்டத்தில் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொள்ளத் தொடங்கினர்.

தொடர்ந்து இரண்டு மணி நேரமாக வகுப்புக்கு செல்லாமல் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அந்த போராட்டத்தில் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொள்ளத் தொடங்கினர்.

இந்நிலையில், உடற்கல்வி ஆசிரியர் கணேஷ் பாபு அதே பள்ளியில் பணியை தொடரலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்நிலையில், உடற்கல்வி ஆசிரியர் கணேஷ் பாபு அதே பள்ளியில் பணியை தொடரலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சுரக்களத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கணேஷ் பாபு வருகை தந்தார். அவரைப் பார்த்த மாணவ-மாணவிகள் கண் கலங்கியபடி உற்சாகமாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சுரக்களத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கணேஷ் பாபு வருகை தந்தார். அவரைப் பார்த்த மாணவ-மாணவிகள் கண் கலங்கியபடி உற்சாகமாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். பின்னர், கிராமத்தின் நுழைவு வாயில் இருந்து ஆசிரியரை கட்டி தழுவி கண்ணீர் மல்க தோளில் சுமந்தவாறு ஊர் முழுக்க சுற்றி பின்னர் பள்ளியை வந்தடைந்தனர். பின்னர், கிராமத்தின் நுழைவு வாயில் இருந்து ஆசிரியரை கட்டி தழுவி கண்ணீர் மல்க தோளில் சுமந்தவாறு ஊர் முழுக்க சுற்றி பின்னர் பள்ளியை வந்தடைந்தனர். இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது. அதன் பின்னர் பள்ளி வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது. இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது. அதன் பின்னர் பள்ளி வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews