இரண்டு ஆண்டுகளுக்கு பின், பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் மற்றும் விளையாட்டு நாள் விழாக்களை நடத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆண்டு தோறும், 'ஸ்போர்ட்ஸ் டே' கொண்டாடப்படும். மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மாணவர்களின் தனித்திறன்களை அறிந்து, அவற்றை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு, கலை மற்றும் கலாசார போட்டிகளும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அதன்பின், ஆண்டு விழா நடத்தப்பட்டு, தனித்திறன் மற்றும் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். கடந்த 2020ம் ஆண்டு, கொரோனா தொற்று பரவல் துவங்கியதால், இதுபோன்ற விழாக்களுக்கு பள்ளிக்கல்வி துறை அனுமதி வழங்கவில்லை. இந்த ஆண்டு ஓரளவு இயல்பு நிலை திரும்பி உள்ளதால், பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் மற்றும் விளையாட்டு நாள் விழாக்களை நடத்த, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
மார்ச்சில் நடத்தப்படும் ஆண்டு இறுதி தேர்வு மற்றும் பொது தேர்வை கருத்தில் வைத்து, விழாக்களை டிசம்பருக்குள் முடித்து கொள்ளுமாறு, பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தேர்வு பயம் போக்கவும், மதிப்பெண் குறித்த மன அழுத்தமின்றி மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த விழாக்களுக்கு அனுமதி அளிப்பதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.