Breaking

Sunday, June 12, 2022

பள்ளி செயல்படும் நேரம் மாற்றமா?..அமைச்சர் பதில்

மாநிலம் முழுவதும் பள்ளி செயல்படும் நேரத்தை மாற்றுவது குறித்து, முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் திட்டமிட்டபடி 13ம் தேதி (நாளை) பள்ளிக்கூடம் திறக்கப்படும். அதற்காக தற்போது பள்ளி வளாகம், சத்துணவு கூடங்கள், கழிவறைகள் ஆகியவை சுத்தப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பள்ளி வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்துவது குறித்து ஏற்கனவே விரிவான சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வது குறித்து முதல்வர் சட்டமன்றத்திலேயே அறிவித்துள்ளார். எனவே 5 ஆண்டு காலத்தில் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.

தனியார் பள்ளிகள் பராமரிப்பு கட்டணமாக அதிக கட்டணம் வசூலிப்பது குறித்தும், பள்ளி செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்படுமா? என்றும் அமைச்சரிடம் கேட்டதற்கு, தனியார் பள்ளிகள் பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் பெற்றோரிடம் எந்த தொகையும் வசூலிக்க கூடாது. அப்படி வசூலிப்பதாக புகார் வந்தால் அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலம் முழுவதும் பள்ளி செயல்படும் நேரத்தை மாற்றுவது குறித்து தமிழக முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog