உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் எஸ்.எம்.சி. மறுகட்டமைப்பு: ஜூலை 2-இல் மேற்கொள்ள உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 19, 2022

Comments:0

உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் எஸ்.எம்.சி. மறுகட்டமைப்பு: ஜூலை 2-இல் மேற்கொள்ள உத்தரவு.

The Department of School Education has ordered the restructuring of School Management Committees (SMCs) functioning in government primary and secondary schools in Tamil Nadu by July 2.

In this regard, the Director of the Integrated School Education State Program, Ir. Accordingly, new SMC groups were formed in government primary and secondary schools last April and May.



Following this, the SMC Reconstruction is scheduled to take place on July 2 (Saturday) in government primary and secondary schools. Parents should be notified at least one week in advance.

Appoint responsible officers to oversee these tasks and to ensure that they are carried out efficiently to accommodate the complaint. In this connection it is stated that all the District Primary Education Officers should give the necessary instructions to the Head Teachers. தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை (எஸ்.எம்.சி.) ஜூலை 2-ஆம் தேதி மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத்திட்ட இயக்குநா் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் புதிய எஸ்எம்சி குழுக்கள் கடந்த ஏப்ரல், மே மாதத்தில் ஏற்படுத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து, அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூலை 2-ஆம் தேதி (சனிக்கிழமை) எஸ்எம்சி மறுகட்டமைப்பு நடத்தப்பட வேண்டும். இதுசாா்ந்து பெற்றோா்களுக்கு ஒருவாரத்துக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

இந்தப் பணிகளை கண்காணிக்க பொறுப்பு அலுவலா்களை நியமித்து புகாருக்கு இடமளிக்காவண்ணம் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இதுதொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews