பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்' என, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள், இம்மாதம் 20ம் தேதி வெளியாகின. பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகளை, ஜூலை 7ல் வெளியிட, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், 8.60 லட்சம் பேர் பங்கேற்ற, பிளஸ் 1 தேர்வின் விடை திருத்த பணிகள் முன்கூட்டியே முடிந்து விட்டன. எனவே, திட்டமிட்ட தேதியை விட, 10 நாட்கள் முன்கூட்டியே, நாளையே தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இதற்கான அறிவிப்பை, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ளார். நாளை காலை 10:00 மணிக்கு பின், www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில், மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, பிளஸ் 1 தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
பள்ளியில் பதிவு செய்த மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு மதிப்பெண்கள் அனுப்பப்படும்.மாவட்ட, மைய மற்றும் கிளை நுாலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக தேசிய தகவலியல் மையங்களிலும் தெரிந்து கொள்ளலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.