கோடைவிடுமுறை நாட்கள் குறைப்பு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 03, 2022

Comments:0

கோடைவிடுமுறை நாட்கள் குறைப்பு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

Last year due to Corona Plus 2 students were not selected and the score was calculated by the new calculation method. Examinations for 10th class were also canceled. Minister Mahesh Poyamozhi has assured that the general examination for Plus 2 and 10th class students will not be canceled this time. The summer vacation for students usually lasts more than a month and a half after the exams each year. But for the past one and a half years, students have been paralyzed at home and are now going to school to learn lessons.

Thus summer vacation has been reduced this academic year. The general examination for PL2 students usually starts in March. It is usually followed by Class 10 examinations and examinations for other classes.

But the general exams and final exams are going on till the end of May as the school live classes started late. Accordingly, the general examination for class 12 will begin on May 5 and end on May 28. Similarly, 11th class students will be able to walk from May 9th to 31st and 10th class students from 6th to 30th May. In addition, students in grades 6 to 9 will be required to take the final exam from May 5 to May 13.

May 13 has been declared as the last working day for students from 1st to 5th class. The Department of Education has announced that all classes for the next academic year (2022-23) will begin on June 13th. It has been informed that the first classes will be held on the 24th only for the 11th class students. Thus it is noteworthy that the school summer vacation period this year has been greatly reduced. மீண்டும் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு நடப்பு கல்வியாண்டில் கோடைவிடுமுறை நாட்கள் குறைப்பு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் புதிய கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. 10ம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த முறை பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படாது என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதியாக தெரிவித்தார்.இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து பொது தேர்வுக்கான அட்டவணைகளும் கல்வித் துறையால் வெளியிடப்பட்டன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கான கோடை விடுமுறை ஒன்றரை மாதங்களுக்கு மேல் இருக்கும். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் வீடுகளில் முடங்கி கிடந்த சூழ்நிலையில் இப்போதுதான் பள்ளிகளுக்கு சென்று பாடங்களை கற்று வருகின்றனர்.எனவே, இந்த கல்வியாண்டில் கோடை விடுமுறையை குறைத்து உடனடியாக அடுத்த வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை தொடங்கும் வகையில் விரைவாக பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதனால் இந்த கல்வியாண்டில் கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது. பிளல் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதை தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வுகளும் பிற வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடைபெறுவது வழக்கம். ஆனால் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால் பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதி தேர்வுகள் மே இறுதி வரை நடக்கிறது. அதன்படி 12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே 5ம் தேதி தொடங்கி 28ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதேபோல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரையும் 10ம் வகுப்புகளுக்கு மே மாதம் 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது. இதுதவிர 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ம் தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும் ஜூன் 13ம் தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews