அடிப்படை வசதிகள்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியையாக ஜீவா பணியாற்றி வருகிறார். பள்ளியில் குடிநீர், மின்சாரம், வகுப்பறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சந்திரன் எம்எல்ஏவுக்கு தெரியவர, கடந்த வாரம் பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது, பள்ளியில் உள்ள குறைகளை மாணவிகளிடம் கேட்டறிந்தார். மாணவிகள் சாலை மறியல்
இதையடுத்து எம்எல்ஏ உத்தரவின் பேரில் குறைகள் சரி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மின்சாரம் இணைப்பு பழுதடைந்தது. மேலும் குடிநீர் பிரச்னையும் ஆரம்பமானது.
அவையும் தீர்க்கப்படாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகள் புறக்கணித்து விட்டு, பள்ளிப்பட்டு காந்தி சிலை அருகில் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மாணவிகளுடன் ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை
தகவலறிந்து பள்ளிப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யும் வரை போராட்டம் தொடரும்’ என்று மாணவிகள் கூறினர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு மாணவிகள் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.