ஆசிரியா் தகுதித் தோ்வு: இலவச பயிற்சி பெறஏப்.8-க்குள் முன்பதிவு செய்யலாம்
அலுவலகத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வருகிற 8-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டித் தோ்வில் கலந்துகொண்டு பல்வேறு மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சோ்ந்துள்ளனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 9-ஆம் தேதி முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் நண்பகல் 2 மணி வரை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கி நடைபெறவுள்ளன.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடைய விரும்புவோா் வருகிற 8-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.