Breaking

Saturday, March 19, 2022

பாடப்புத்தகங்கள் சில்லறை விற்பனைக்கு அரசு அனுமதி

பள்ளி மாணவர்களுக்காக அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பள்ளி பாடப்புத்தகங்களை விற்பனை செய்வதற்கு தமிழ்நாட்டில் மொத்தம் 276 சில்லறை விற்பனை கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

இதையும் படிக்க | தமிழ் 'மீடியம்' பள்ளிகளில் இலவச பாடப்புத்தகம்

அச்சில்லறை விற்பனையாளர்கள் விவரங்கள் மற்றும் பாடநூல்களின் விலைப்பட்டியல் www.textbookcorp.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக பாடநூல் விற்பனை செய்ய விரும்பும் சில்லறை விற்பனையாளர்களும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog