Breaking

Wednesday, March 09, 2022

2022 - 23-ம் ஆண்டுக்காக தமிழக பட்ஜெட் மார்ச் 18-ம் தேதி தாக்கல்!

2022 - 23-ம் ஆண்டுக்காக தமிழக பட்ஜெட் மார்ச் 18-ம் தேதி தாக்கல்!

2022 - 23-ம் ஆண்டுக்காக தமிழக பட்ஜெட் மார்ச் 18-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என சபாநாயகர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 2022 - 23-ம் ஆண்டுக்காக தமிழக பட்ஜெட் மார்ச் 18-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூட்டத்தொடர் நடைபெறும். 2022 - 23-ம் ஆண்டுக்காக தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். 2022 - 23 மானிய கோரிக்கை மார்ச் 24-ம் தேதி தொடங்கும். கொரோனா விதிகளை பின்பற்றி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். கேள்வி நேரம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். தொழில்நுட்ப பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட பிறகு சட்டப்பேரவையின் முழு நிகழ்ச்சியும் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும். கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 18-ல் அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு எடுக்கப்படும் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog