MBBS , BDS படிப்புகளில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடக்கம்; மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 13, 2022

Comments:0

MBBS , BDS படிப்புகளில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடக்கம்; மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு.

MBBS , BDS படிப்புகளில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடக்கம்; மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை முதல் வகுப்புகள் துவங்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும், மருத்துவ கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேசிய மருத்துவ கமிஷன் வழிகாட்டுதல்படி, 2021-22ம் ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், நாளை முதல் துவங்க வேண்டும். கல்லுாரி விடுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, உணவு கூடங்களில் 50 சதவீதம் மட்டுமே, மாணவர்கள் இருக்க வேண்டும். நூலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், அனுமதியின்றி விழாக்கள், கூட்டங்கள் எதுவும் நடத்தக்கூடாது. வகுப்பறைகளில் அனைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டும். அனைத்து மாணவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவர்களிடம் கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், உணவு உட்பட விடுதி கட்டணம், புத்தகங்கள், வெள்ளை அங்கி, ஸ்டெதஸ்கோப், பல்கலை பதிவு கட்டணம், காப்பீடு உள்ளிட்ட எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது. கடந்தாண்டு பின்பற்றப்பட்ட அதே நடைமுறையையே இந்தாண்டும் பின்பற்ற வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்பதால் அவர்கள் எந்தவித உதவி தொகைக்கும் விண்ணப்பிக்க வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews