மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுமா?: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
தேர்தல் வாக்குறுதியின்படி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் நிச்சயம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வாக்குறுதி தந்தால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது மக்களிடம் பேசிய அவர், பெரிய மருதும், சின்ன மருதும், ஹைதர் அலியும், திப்பு சுல்தானும், வீர மங்கை வேலுநாச்சியாரும் உலவிய மண் திண்டுக்கல் மண் என்று புகழ்ந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் திமுகவின் கோட்டை. 2005-ல் மாநாட்டிற்காக திண்டுக்கல்லுக்கு வந்ததை மறக்க முடியாது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதியின்படி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் நிச்சயம் வழங்கப்படும். வாக்குறுதி அளித்தால் ஏமாற்றமாட்டேன். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கஜானாவை காலி செய்துள்ளனர். தற்போது தமிழக அரசின் நிதிநிலையை சீரமைத்து வருகிறோம் என்று கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.