மணல் விற்பனை - புதிய விதிமுறைகள் வெளியீடு - Press Release - Dt: 07.01.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 07, 2022

Comments:0

மணல் விற்பனை - புதிய விதிமுறைகள் வெளியீடு - Press Release - Dt: 07.01.2022

மணல் விற்பனை - புதிய விதிமுறைகளை வெளியிட்டார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்! செ.கு.எண் :02

நாள்: 07.01.2022

மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகள் மாண்புமிகு நீர்வளத்துறை மற்றும் அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் அறிக்கை

பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் கட்டடமற்ற இதரபணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான புதிய வழிமுறைகளை செயல்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்திரவிட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் ஆற்றுப்படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து மணல் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஆய்வு செய்து, வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை செயல்படுத்தும் வகையிலும், ஏழை, எளியோர் பயன்பெறும் வகையிலும் புதிய வழிமுறைகளை கடைப்பிடித்து மணல் விற்பனை செய்யுமாறு ஆணையிட்டுள்ளார்கள்.

பொதுமக்கள், , ஏழை. எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி மணலை எடுத்துச் செல்லுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.00 மணி வரை மணல் இருப்பை பொருத்து வழங்கப்படும். தற்பொழுது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சுற்றுப்புறச் சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது

முதற்கட்டமாக தற்பொழுது உள்ள தகவல் தொழில்நுட்ப புதிய வழிகாட்டுதல்களுடன் மணல் விற்பனை எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசு மணல் கிடங்குகளில், கூடுதலாக செயல்படவுள்ள வங்கிகளில் கவுண்டர்கள் மூலமாக பொதுமக்கள் பணம் செலுத்தி மணலை பெற்றுக் கொள்ளலாம் இவ்வசதியை, தற்போது நடைமுறையிலுள்ள Net Banking. Debit Card மற்றும் UPI ஆகிய Online வழியாகவும் பணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் கொள்ளலாம்.

இவ்வாறு மாண்புமிகு வெளியீடு: இயக்குநர் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews