Breaking

Sunday, January 16, 2022

CBSE தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியீடு

நாடு முழுவதும் நவம்பர் - டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற 10,11ஆம் வகுப்பு சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வு முடிவுகள் விரைவில் ஜனவரி 15ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டன.

ஆனால் பல்வேறு காரணங்களால் ஜனவரி 15ஆம் தேதி சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இதனால், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள, தேர்வெழுதியருக்கும் மாணவ, மாணவிகள் இன்னமும் ஒரு வார காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், அடுத்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றோ, தேதி குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் தரப்பில் எந்த உறுதி செய்யப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை. இதனால், வரும் வாரத்தில் எந்த நேரத்திலும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்றும், மாணவர்கள் அவ்வப்போது சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், cbsc.gov.in, cbseresults.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், டிஜிலாக்கர் எனப்படும் செயலி மூலமாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறியலாம்.

உமங் செயலி மற்றும் குறுந்தகவல் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள்..

- cbseresults.nic.in

- cbse.nic.in

- cbse.gov.in

மேற்கண்ட இணையதளங்களிலிருந்து முதல் பருவத்தேர்வுக்கான மதிப்பெண்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog