TNPSC - 17.11.2021 அன்று இலவசமாக மாதிரிநேர்காணல் (Mock Interview) பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 13, 2021

Comments:0

TNPSC - 17.11.2021 அன்று இலவசமாக மாதிரிநேர்காணல் (Mock Interview) பயிற்சி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வேளாண்மை அலுவலர் TAgriculture Officer பணிக்காகவும், தோட்டக்கலை அலுவலர் (Horticulture Officer பணிக்காகவும் கடந்த பிப்ரவரி மாதம் காலிப்பணியிட அறிவிப் வெளியிடப்பட்டது இத்தேர்வுகளுக்கான எழுத்துத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் முடிவுற்ற நிலையில் கடந்த 22092021 அன்று எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தற்போது எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இறுதி நேர்காணலுக்கு தயாராகிட உதவும் வகையில் மாதிரிநேர்காணல் (Mock Interview) தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 17.11.2021 புதன்கிழமையன்று இலவசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களில் மாதிரிநேர்காணலில் Mock Interview) கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரிலோ அல்லது 8109199po என்ற WhatsApp எண்ணிற்கோ தங்களது பெயர் மற்றும் TNPSC யின் மேற்க்கண்ட தேர்விற்கான பதிவு எண்ணை குறிப்பிட்டு 16.11.2021 செவ்வாய்க்கிழமைக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews