நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: அடுத்து என்ன செய்யலாம்? 'பிளான் பி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 08, 2021

Comments:0

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: அடுத்து என்ன செய்யலாம்? 'பிளான் பி

"இந்த ஆண்டு பல சிக்கல்களை எல்லாம் தாண்டி நடத்தி முடிக்கப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவு நவம்பர் 1ஆம் தேதி தேசிய தேர்வுகள் முகாமையால் வெளியிடப்பட்டது.

தேசிய தேர்வுகள் முகமை நீட் இணையதளத்தில், தேர்வு முடிவுகள் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்காக வெளியிடப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் 2021 நீட் தேர்வை 16.14 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 8.70 லட்சம் பேர் தான் தேர்ச்சி பெற முடிந்தது. இந்த ஆண்டு மூன்று மாணவர்கள் நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்க விரும்புகிறார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே, இதர நாடுகளுக்குச் சென்று எம்பிபிஎஸ் படிக்க முடிவு செய்கிறார்கள். அதில் முதல் இடத்தில் இருக்கும் நமது அண்டை நாடு வங்கதேசம்தான். ஏனென்றால், மிகக் குறைந்த செலவில் எம்பிபிஎஸ் படிப்பை வழங்கும் நாடுகளில் வங்கதேசமும் ஒன்று. அங்கு வாழ்வதற்கான செலவுகளும் குறைவு. எனவேதான் இந்தியாவிலிருந்து ஏராளமானோர் வங்கதேசம் சென்று எம்பிபிஎஸ் படிக்க விழைகிறார்கள்.

வங்கதேசத்தில் எம்பிபிஎஸ் படிக்க ஐஇஎல்டிஎஸ் / டிஓஇஎஃப்எல் / பிடிஇ போன்ற எந்த மொழித் தேர்வுகளையும் எழுதத் தேவையில்லை.

சார்க் நிதியுதவி திட்டத்தின் கீழ் வங்கதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 22 இடங்கள் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் 40 - 45 சதவீதம் சர்வதேச மாணவர்களுக்கு ஒதுக்கி வருகின்றன. இது மட்டுமல்ல, வங்கதேசம்தான், மிகக் குறைந்தக் கட்டணத்தில் மிக உயர்தர மருத்துவ எம்பிபிஎஸ் படிப்பினை வழங்குகிறது என்பதே பலரும் வங்கதேசம் சென்று எம்பிபிஎஸ் படிக்க விரும்புகிறார்கள்.

அதுமட்டுமல்ல, வங்கதேசத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் இந்திய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்." "வங்கதேசத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கை பெற ஸ்மைல் எஜூகேஷன் அமைப்பு மிக நம்பகமான அமைப்பாக உள்ளது. மேலும், வங்கதேசத்தில் எம்பிபிஎஸ் படிப்பதற்கான தகுதிகள் குறித்த விவரங்களை

https://www.mbbsinbangladesh.in/eligibility-criteria/ இந்த இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

இதில் சில தடைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

அதாவது, எந்த ரீதியிலான சலுகைகளும் கிடைக்காது.

குளிர்சாதன வசதி கொண்ட விடுதிகள் கிடையாது.

முழுக்க முழுக்க சைவ உணவுகள் கிடைப்பது அரிது.

சில மாணவர் விடுதிகள் தரமாக இருக்காது.

எம்பிபிஎஸ் இரண்டரை ஆண்டுகள் முடித்த பிறகு, வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வங்காள மொழியை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

இதர நாடுகளைக் காட்டிலும், வங்கதேசத்தில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு கல்விக் கட்டணம் மட்டும் அதிகமாக இருக்கும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews