Breaking

Tuesday, November 23, 2021

நவ.28-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்...

அரியலூா் மாவட்டம், தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பா் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில், திருச்சி, சென்னை, திருப்பூா்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு, நோ்முகத் தோ்வு நடத்துகிறாா்கள். மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் தொல்.திருமாவளவன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோா் கலந்து கொண்டு வேலைநாடுநா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளனா்.

எனவே வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வேலைவாய்ப்பு முகமை பயன்படுத்திக்கொண்டு பணி நியமன ஆணையை பெற்று பயன்பெறலாம் என்று கல்லூரியின் தாளாளா் எம்.ஆா்.ரகுநாதன் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog