பிற வங்கி கணக்கில் உள்ள பணத்தை பெற போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவை அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 16, 2021

Comments:0

பிற வங்கி கணக்கில் உள்ள பணத்தை பெற போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவை அறிமுகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற வங்கி கணக்கில் உள்ள பணத்தை எந்த கட்டணமும் இல்லாமல் எடுக்க இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ்வங்கியின் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி அஞ்சல்கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்ட செய்திக்குறிப்பு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் ஆதார் பேமெண்ட் சேவை மூலம் பிற வங்கிகணக்கில் உள்ளபணத்தை எந்த கட்டணமும் இல்லாமல் உங்கள் வீட்டின் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களில் பெற முடியும் இதற்காக தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, இந்திய அஞ்சல் துறையின் கீழ்இயங்கும்இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியாகும். இந்த வங்கி பொது மக்கள் அணுகுவதற்கு எளிமையான, குறைந்த கட்டணங்களுடன், நம்பகமான வங்கி சேவையினை அளிக்கும் நோக்கத்துடன் நகரங்களில் மற்றும் கிராமங்களிலும் துவங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் தங்களு டையபிற வங்கி கணக்கில் உள்ள பணத்தை அஞ்சல்நிலையங்களில் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் ஆதார் பேமெண்ட் சேவை (AEPS) மூலம் எந்த வித கட்டணமும் இல்லாமல் எளிதில் பெற முடியும் அஞ்சல் நிலையங்களுக்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் பகுதி போஸ்ட்மேன் மூலமாகவும் இந்த சேவையை பயன் படுத்திக்கொள்ள முடியும்.

இந்த இக்கட்டான கொரோனா காலத்தில், பிற வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கதொலைவில் உள்ள வங்கி கிளையையோ அல்லது ஏடிஎம் இயந்திரத்தையோ தேடும் அலைச்சலின்றி, தங்கள் ஊரில் உள்ள அஞ்சல் நிலையத்திலேயே தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை எளிதாக பெற முடியும், இந்த ஆதார் பேமெண்ட் சேவை மூலம் பிற வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றமும் செய்ய முடியும், கணக்கில் உள்ள பேலன்ஸ் மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் தகவல்களையும் பெற முடியும். இதற்கு பயனாளிகளிடமிருந்து எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் இந்த சேவையை பெற பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை பதிவு செய்திருத்தல் அவசியம். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவையை பயன்படுத்தி பயனடையுமாறு கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews