"பல்வேறு விதமான வங்கிக்கடன் பற்றிய விவரங்களை வாடிக்கையாளா்கள் அறியும் வகையில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில், வங்கிகளின் சங்கமம் நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (அக். 26) நடைபெறவுள்ளது.
சென்னை தியாகராயநகா் சா் தியாகராய சாலையில் உள்ள விஜய மஹாலில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, சிட்டி யூனியன் வங்கி, ஃபெடரல் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் வாடிக்கையாளா்களுக்கு அளிக்கப்படும் சேவைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
பல்வேறு விதமான வங்கிக்கடன் பற்றிய விவரங்களையும், வங்கிகளின் இதர சேவைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வாடிக்கையாளா்கள், சில்லறை வியாபாரிகள், சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோா்களுக்குத் தேவையான விவரங்களை அறியலாம். நிகழ்ச்சிக்கு வருபவா்கள் தங்களின் வங்கிக் கணக்கு புத்தகத்துடன் வரவேண்டும்.மேலும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்."

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.