தமிழகத்தில் 6 பேர் வெற்றி பெற்று சாதனை
* பழனி மாணவி திவ்யா முதல் இடத்தை பிடித்தார்
சென்னை: ஐஎப்எஸ் தேர்வு முடிவு நேற்றிரவு வெளியிடப்பட்டது. இந்திய அளவில் 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) இந்திய வனப்பணி (ஐஎப்எஸ்) 89 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து முதல் நிலை, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு என மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடந்தது. இந்த நிலையில் நேர்முக தேர்வு முடிவு முடிந்து நேற்றிரவு யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் இறுதி தேர்வு முடிவை வெளியிடப்பட்டது. இதில், இந்தியா முழுவதும் 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி சங்கர் கூறியதாவது: நேர்காணல் முடிவடைந்ததையடுத்து இறுதி தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in நேற்று இரவு வெளியிட்டது. இந்திய அளவில் 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தேர்ச்சி பெற்ற 89 பேரில் 50 பேர் சங்கர் ஐஏஎஸ் அகடாமி மாணவர்கள். சென்னை, டெல்லி, பெங்களூர், திருவனந்தபுரம் மையங்களில் படித்தவர்கள். தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 6 மாணவர்கள் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 5 பேர் ஷங்கர் எங்கள் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். கேரளாவை சேர்ந்த சூரஜ் பென் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலாம் இடத்தை பிடித்துள்ளார். மேலும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வித்யாதரி என்ற மாணவி 2ம் இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த திவ்யா என்ற மாணவி இந்திய அளவில் 10ம் இடத்தை பிடித்தும், தமிழ்நாட்டில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் ஆவார். அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் 8 இடங்களை எங்கள் அகடாமி மாணவர்கள் பிடித்துள்ளனர். இவ்வாறு வைஷ்ணவி சங்கர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.