முறைகேட்டில் ஈடுபட்ட 66 ஆசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 02, 2021

1 Comments

முறைகேட்டில் ஈடுபட்ட 66 ஆசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை!

முறைகேட்டில் ஈடுபட்ட 66 ஆசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத, தேர்வு வாரியம் தடைவிதித்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த 2017ம் ஆண்டு போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதற்காக சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போது, அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணம் கொடுத்து தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக இருந்த ஜெகன்னாதன் விசாரணை நடத்தினார். அதில், அவர்கள் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 199 பேர் வாழ் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளை எழுத முடியாதபடி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணை மேலும் நீடித்து வந்தது.

தற்போது, இந்த முறைகேடு தொடர்பான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. அதிலும் 66 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களின் முழுமையான விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களும் வாழ்நாள் முழுவதும் மேற்கண்ட போட்டித் தேர்வுகளை எழுத முடியாத நிலைக்கு தடை விதித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து, மேற்கண்ட விரிவுரையாளர்களுக்கான போட்டித் தேர்வு இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

1 comment:

  1. கற்றுக் கொடுக்கும் தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்கள் முறைகேடு செய்துள்ளார் இவர்களுக்கு பணி வாய்ப்புக்கூட வழங்க நிலையில் இல்லை.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews