200க்கு மேலான இடங்கள் நிரப்பப்பட உள்ளது - நாகர்கோவிலில் அக்.12ல் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் - கலெக்டர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 06, 2021

Comments:0

200க்கு மேலான இடங்கள் நிரப்பப்பட உள்ளது - நாகர்கோவிலில் அக்.12ல் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் - கலெக்டர் தகவல்

அக்.1: குமரி மாவட்ட கலெக்டர் அர விந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புமற் றும் பயிற்சித்துறையின் சார்பாக குமரி மாவட்ட அளவில் நாகர்கோவில், கோணத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத் தில் வைத்து அக். 12 காலை 9 மணி முதல் தொழில் பழகுநர் சேர்க்கைமுகாம் நடைபெற உள்ளது. மத்திய, மாநில அரசு நிறுவனங்கள். பொதுத் துறை நிறுவனங்கள் மற் றும் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமின் மூலம் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் இடங் கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஐ.டி.ஐ தேர்ச்சிப் பெற்று தற்போது வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாத பயிற்சியாளர்க ளும், தொழிற்பழகுநர் சட்டம் 1961-ன் அடிப்ப டையில் ஒன்றிய அர சால் செயல்படுத்தப்படும் தொழிற்பழகுநர் திட்டத் தின் கீழ் தொழிற்பயிற்சி முடித்த பயிற்சியாளர்க ளுக் தாழிற்பழகுநர் பயிற்சி வழங்க விரும்பும் தொழில் நிறுவனங்களும் கலந்து கொள்ளலாம்.

இதில் பங்கேற்று தேர்வு பெறும் ஒருவருட தொழில் பிரிவுகளில் தொழிற்பயிற் சியினை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்குகுறைந்தபட்சம் 7700 மற் றும் இரு வருட தொழில் பிரிவுகளில் தொழிற்பயிற் சியினை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு 88050 தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் உதவித்தொ கையாக வழங்கப்படும். தொழிற்பழகுநர் பயிற் சியினை வெற்றிகரமாக நிறைவு செய்பவருக்கு உலக அளவில் அங்கீகா ரம்பெற்றதேசிய தொழில் பழகுநர் சான்று வழங்கப்பட டும்.இச்சான்று பெற்றவர் கள் பொதுத்துறை மற்றும் பெரிய தொழில் நிறுவன வேலைவாய்ப்புகளில், ஐ.டி.ஐ. முடித்து தேசிய தொழிற்சான்று பெற்றவ ரைவிட முன்னுரிமைபெற் றவராக கருதப்படுவர்.

தொழில் பழகுநர் சட் டம் 196ன் படி குறைந்தபட் சம்30 பணியாளர்களுடன் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவ னங்கள் தொழில் பழகுநர் இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து தொழில் பழகுநர் திட்டத் தினை செயல்படுத்துவது கட்டாயம் என்பதால், அரசின் சட்ட நடவடிக் கைகளை தவிர்க்கும் வகை யில் மேற்படி குறைந்த பட்ச பணியாளர்களு டன் இயங்கும் தொழில் நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திதொழில் பழகுநர் திட்டத் தில் இணைந்து கொள்ள லாம். குறைந்தபட்சம் 4 முதல் 29 பணியாளர்களு டன் இயங்கும் தொழில் நிறுவனங்கள் தங்கள் முழு விருப்பத்தின் பேரில் இத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் இணைவதன் மூலம்திறன் வாய்ந்த மனிதவளம், தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெறுவதுடன், ஒரு தொழில் பழகுநருக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத்தொகையில் 25 சத வீதம் தொகை அல்லது 21500 வீதம் அனைத்து தொழில் பழகுநர்களுக் கான ஊக்கத்தொகை கணக்கிடப்பட்டு ஒன்றிய அரசால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மீள வழங்கப்படும். எனவே ஐடிஐ முடித்த பயிற்சியா ளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன் அடையுமாறு கேட் டுக்கொள்ளப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில், கோணம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04652 264463 / 9499055804 என்ற தொலைபேசிஎண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews