SBI வங்கியில் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் அறிவிப்பு - வீட்டுக்கடன் பெற தேவையான ஆவணங்கள் – முழு விபரம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 26, 2021

Comments:0

SBI வங்கியில் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் அறிவிப்பு - வீட்டுக்கடன் பெற தேவையான ஆவணங்கள் – முழு விபரம்!

பாரத் ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையார்களுக்கு குறைந்த வேட்டியில் வீட்டுக்கடன் வழங்கி வருகிறது. அதற்கு வாடிக்கையாளர்கள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடன்: இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகளின் சேவைக் கட்டணத்தை மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. அறிவிப்பினை தொடர்ந்து வங்கிகளும் தங்களது வங்கியின் நிர்வாக சேவைக் கட்டணங்களை மாற்றி அமைத்து அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி செப்டம்பர் 16ம் தேதி முதல் 6.70% என்ற புதிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. பாரத் ஸ்டேட் வங்கியில் வீட்டுக்கடன் பெறுபவர்கள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம். ஆவணங்கள்: தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் அடையாள அட்டை, முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட வீட்டுக்கடன் படிவம், மூன்று பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் . பான், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை வீட்டு முகவரி ஆவணம் / சமீபத்தில் நீங்கள் மின்சார கட்டணம் கட்டிய ரசீது, டெலிபோன் பில், தண்ணீர் வரி கட்டிய ரசீது, பாஸ்போர்ட் நகல், ஆதார் அடையாள அட்டை நகல், ஓட்டுநர் உரிமம் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்று. வீடு கட்டும் இடம் தொடர்பான ஆவணங்கள் கட்டுமானத்திற்கான அனுமதி: விற்பனைக்கு பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் ( மகாராஷ்ட்ராவில் மட்டும்) ஆக்குபன்சி சான்றிதழ் பராமரிப்பு பில், மின்சார கட்டணம், சொத்து வரி ரசீது அங்கீகரிக்கப்பட்ட திட்ட நகல் ற்றும் பில்டரின் பதிவு செய்யப்பட்ட வளர்ச்சி ஒப்பந்தம் பில்டர் அல்லது விற்பனையாளருக்கு செய்யப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் காட்டும் கட்டண ரசீதுகள் அல்லது வங்கி கணக்கு அறிக்கை வங்கிக் கணக்கு தொடர்பான ஆவணங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கான பேங்க் அக்கௌண்ட் ஸ்டேட்மெண்ட் இதற்கு முன்பு வேறெந்த வங்கிகளும் கடன் வாங்கியிருந்தால் அந்த கடன் தொடர்பான கணக்கு மற்றும் விபரங்கள் வருமான ஆதாரம்: மூன்று மாதங்களுக்கான மாத சம்பள சான்றிதழ் கடந்த இரண்டு வருடங்களுக்கான படிவம் 16 இன் நகல் அல்லது கடந்த இரண்டு நிதியாண்டுகளில் வருமான வரித் துறையால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஐடி வருமானத்தின் நகல் சம்பளம் வாங்காத விண்ணப்பதாரர்கள்: தொழில் நடைபெறும் இடத்தின் முகவரி சான்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கான ஐ.டி. ரிட்டர்ன்ஸ் கடந்த மூன்று ஆண்டுகளாக இருப்புநிலை, லாபம் மற்றும் இழப்பு கணக்கு வணிக உரிம விவரங்கள் TDS சான்றிதழ் தகுதி சான்றிதழ்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews