அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
“தமிழக சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வரும் அறிவிப்புகளை வரவேற்கிறோம். அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி முதல்வர் கவனத்திற்கு கோரிக்கைகளை வைக்கின்றோம். மருத்துவ, பொறியியல், தொழில்நுட்பத் துறை மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிவரும் 7.5 சதவீத இட ஒதுகீட்டில் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படுவது போன்று உதவிபெறும் பள்ளிகளிலும் ஆங்கிலவழி இணை பிரிவினை தடங்கலின்றி செயல்படுத்திட வேண்டும். பணிக்காலத்தில் மரணமடைகின்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர், பணியாளர்களுக்கு தகுதியான வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுத் துறையில் பணிநியமனம். புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய பென்சன் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசு வழங்கியுள்ள அகவிலைப்படி உயர்வினை அதே தேதியிட்டு குறைவின்றி வழங்கிட வேண்டும். உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியரல்லாப் பணியாளர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் விடுப்பு சார் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலித்து உதவிபெறும் பள்ளிகளில் கல்விநலன், மாணவர்நலன் மற்றும் ஆசிரியர் நலன் காத்திட தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.