நல்லாசிரியர்கள் தேர்வில் குளறுபடி - ஆசிரியர்கள் அதிருப்தி!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 04, 2021

Comments:0

நல்லாசிரியர்கள் தேர்வில் குளறுபடி - ஆசிரியர்கள் அதிருப்தி!!

சிவகங்கை மாவட்டத் தில் நடந்த மாநில நல்லா சிரியர் விருதுக்கான தேர் வில் அரசாணையை மீறி பல் வேறு குளறுபடி நடந்திருப் பதாக ஆசிரியர்கள் அதி ருப்தி தெரிவிக்கின்றனர். செப்.,5 ஆசிரியர்தினமாக கொண்டாடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருது வழங்கப் படுகிறது. இவ்வாண்டு, மாநில நல்லாசிரியர் கள் தேர்வுக்கு, கூடுதல் வழிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட் டது.

அதில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியஆசிரியர்களுக்கே விருது என்ற சிறப்பாணையும், முதன்மைக்கல்வி அலு வலர் தலைமையிலான குழு பள்ளிக்கே சென்று விண்ணப்பதாரர்களின் செயல்பாடுகளை விசா ரித்து மதிப்பீடு செய்ய வேண்டும். விண்ணப் பதாரர்களை மாவட்டத் தேர்வுக்குழு அழைத்து நேர்காணல் நடத்தி மதிப் பீடு வழங்க வேண்டும் உள்ளிட்டவை அடங்கும். ஆனால், இதில் எந்த நடைமுறையும் சிவகங்கை மாவட்டத்தில் பின்பற்றப் படவில்லை என ஆசிரியர் கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். மேலும், என்ற 1:2 விகிதத்ததில் மாவட்டத் திலிருந்து விண்ணப்பதா ரர்கள், தேர்வு செய்யப் பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி தேர் வுக்குழுவுக்கு அனுப்பிய நிலையில், தேர்ச்சி அடை யாத சிலரும் அவசர அவ சரமாக விசாரணைக்கு உட் படுத்தப்பட்டு விருதுக்கு பரிந்துரை செய்திருப்பது அரசியல்தலையீட்டின்கார ணமாக இருக்குமோ என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தவிர, தொடக்க, நடு நிலைப்பள்ளிக்கு 4 விருதுகள் என மாவட்டத் திற்கு ஒதுக்கிய நிலையில், தலைமையாசிரியர்கள் நான்கு பேருக்கும், உடற் கல்வி ஆசிரியர்கள் இரு வருக்கும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தலா ஒருவருக்கும் விருது வழங்கியது அரசாணைப் படி தவறானதாகும் என்று புகார் தெரிவிக் கும் ஆசிரியர்கள், இதுசம்மந்தமாக, தமிழக முதல்வர் மற்றும் பள் ளிக்கல்வித்துறை அமைச் சர் தலையிட்டு நடவடிக்கை உரிய எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews