Breaking

Monday, September 13, 2021

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 11:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம். பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு, தேர்ச்சி மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களும் இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், 15 மற்றும் 16ம் தேதிகளில் நேரில் பதிவு செய்ய வேண்டும்.விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு தலா 275 ரூபாய்; மறுகூட்டலுக்கு, உயிரியல் பாடத்துக்கு 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு தலா 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog