மதுரை தேனி மெயின் ரோட்டில் (மதுரை -கொச்சின் சாலை -NH 49) மேலக்கால் மெயின் ரோடு - முடக்குச்சாலை சந்திப்பு முதல் டோக் நகர் சந்திப்பு வரை மேம்பாலம் கட்டுமானப்பணிகள் 20.09.2021 முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதால் காளவாசல் சந்திப்பிலிருந்து தேனி மெயின் ரோடு நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் நாகமலை புதுக்கோட்டையிலிருந்து அச்சம்பத்து வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் மேற்படி மேம்பால கட்டுமானப்பணிகள் நிறைவடையும் வரை கீழ்க்கண்ட வழித்தடங்களில் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
1. மதுரை நகரிலிருந்து முடக்குச்சாலை தேனி மெயின் ரோடு அச்சம்பத்து - வழியாக வெளியில் செல்லும் அனைத்து வாகனங்களும் அதே வழித் தடத்தில் வழக்கம் போல் செல்ல வேண்டும்.
2. நாகமலை புதுக்கோட்டை மற்றும் நான்குவழிச்சாலையிலிருந்து அச்சம்பத்து வழியாக நகருக்குள் வரும் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் கார் மற்றும் இலகுரக வாகனங்கள் வழக்கம் போல் அச்சம்பத்து வழியாக நகருக்குள் நுழைந்து டோக் நகர் சந்திப்பு வரை சென்று இடதுபுறமாக திரும்பி டோக் நகர் - கோச்சடை ரோடு - பாஸ்போர்ட் ஆபிஸ் வழியாக முடக்குச்சாலை சென்று நகருக்குள் செல்ல வேண்டும். 3. நாகமலை புதுக்கோட்டை மற்றும் நான்குவழிச்சாலையிலிருந்து அச்சம்பத்து வழியாக நகருக்குள் வரும் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டு, மேற்படி வாகனங்கள் நான்கு வழிச் சாலையில் இருந்து துவரிமான் - மேலக்கால் மெயின் ரோடு - கோச்சடை வழியாக நகருக்குள் வர வேண்டும்.
மேற்கண்ட வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி மதுரை மாநகர் வாகன போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.